SJBயை தாக்கும் போது JVP அமைதி காத்தாலும் ,JVPக்கு ஆதரவாக அரசைக் கண்டித்த சஜித்

இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“தேர்தலை வலியுறுத்திக் கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் (JVP) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க அரசு முயற்சிப்பதையே இந்த செயல் காட்டுகிறது.


“எந்த ஒரு தலைவரும் அல்லது கட்சியும் எப்போதும் முற்றிலும் சரியாக இருப்பதில்லை, அதனால்தான் ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

எந்தத் தலைவரும் அல்லது கட்சியும் எப்போதும் சரியாக இருந்ததில்லை, அதனால்தான் ஜனநாயகத்திற்குள் கருத்து வேறுபாடுகளை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். இன்று #NPP எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதில் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். அரசாங்கத்தின் செய்தி பொதுமக்களுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் உள்ளது, வாயை மூடிக் கொண்டு , உட்காரு என்பதே அவர்களது செய்தியாக உள்ளது” என தாக்குதலுக்கான தனது கண்டனத்தை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பதிவிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

அதாவது அரசாங்கம் மக்களை அமைதியாக இருக்கச் சொல்கிறது என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.