அபேக்ஷா மருத்துவமனை பிணவறைக்குள் புகுந்துள்ள ‘ பிண மோசடி காகங்கள்’ (Video)

பெருந்தொகையான புற்று நோயாளர்கள் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், அந்த நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக அரசாங்கம் பெரும் தொகையை செலவிடுகிறது.

மேலும், கொடையாளிகள் , வணிக சமூகம் மற்றும் சமூக பராமரிப்பு நிறுவனங்கள் நோயாளிகளின் நலனுக்காக அதிக அளவு நிதிகளை நன்கொடைகளை அளித்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பெரும் பணியைச் செய்கின்றன. இத்தகைய கொடையாளிகளின் நன்கொடைகள் மூலம் நோயாளிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தங்குமிட வசதிகளைக் கூட தினமும் பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற நன்கொடைகள் சமூகத்தால் வழங்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனையில் நடக்கும் பெரும் மோசடி ஒன்று குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சிங்களத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

புற்றுநோய் மருத்துவமனையில் இறக்கும் நோயாளிகளின் சடலங்களை மலர்சாலைகளுக்கு (நாட்டின் எந்தப் பகுதியிக்கும்) கொண்டு செல்லும்போது, ​​மருத்துவமனையின் நலன்புரிப் பிரிவு அதற்கான போக்குவரத்துக் கட்டணத்திற்காக நிதியை நன்கொடையாக அளிக்கிறது, ஆனால் மருத்துவமனையில் உள்ள ஒரு குழுவினர் உன்னிப்பாக அப் பணத்தை எடுத்துக் கொண்டு , இறந்தவரது தரப்பினரிடம் இருந்தும் போக்குவரத்து பணத்தை , இறப்பு சான்றிதழின் நகல் ஒன்றை பெற்று நலவாரியத்தில் சமர்பித்து, இறந்தவரது உடலை கொண்டு செல்ல கொடுக்கப்படும் தொகையை ஊழல் பரிவர்த்தனை ஒன்றின் மூலம் , எடுப்பதோடு சிலர் அதிலும் கமிஷன் பெறுவதாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது. .

புற்று நோயாளியின் குடும்பம் என்பது மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் நலிவடைந்தவர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு , மனிதாபிமானமுள்ள இதயம் கொண்ட மனிதநேயவாதிகள் செய்யும் நிதியை கொள்ளையடிப்பவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவின்படி, ஒருவரின் உடலை இறந்தவரது பகுதிக்கு எடுத்துச் செல்ல 40,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

தரவு அறிக்கைகளின்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 14,000 புற்றுநோயாளிகள் இறக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 38 உயிர்கள் என்று கணக்கிடப்படுகிறது.

நிலைமை அவ்வாறெனில், அபேக்ஷா வைத்தியசாலையின் பிரேத அறையில் இந்த அற்பச் செயலில் ஈடுபடுவோர், நன்கொடையாகக் கொடுக்கும் சுமார் 1,520,000 ரூபாய் மக்களின் பணத்தை நாளொன்றுக்கு சுரண்டுகின்றனர்,

இந்த நிதி மோசடி ஒரு மாதத்திற்கு நடத்தப்பட்டால் சுரண்டப்பட்ட தொகை 45,600,000/= ரூபா, ஒரு வருடத்திற்கு கணக்கிட்டால் 547,200,200/= ரூபா.

அதிகாரிகள், உடனடியாக இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, இறக்கும் நோயாளிகளுக்காக அளப்பரிய சேவை செய்து வரும் தொண்டு நிறுவனங்களின் நன்கொடைப் பணத்திற்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும்.

சிங்கள செய்தி
https://www.ceylonmirror.net/sinhala/21222.html

Leave A Reply

Your email address will not be published.