திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் யானை தாக்கி மரணம்!

முன்னாள் அமைச்சர் எம்.சி.கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தம்பிலுவில் பிரதேசத்தில் உள்ள வயலுக்கு இரவுக் காவல் கடமைக்குச் சென்றிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரின் மறைவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஓய்வுநிலை விவசாய போதனாசிரியரான கங்காதரன் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக பொதுநல செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.