யூடியூபர் சாட்டை துரைமுருகன் அதிரடி கைது!

பிரபல யூடியூபரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவருமான சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக அவர் மீது திமுகவினர் புகார் அளித்தனர்.

மேலும் தற்போதைய தமிழ்நாடு அரசு மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் அவதூறான கருத்துக்களை சாட்டை துரைமுருகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, நெல்லை வீராணம் பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இதுபோன்ற அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.