கஞ்சிபானியின் துப்பாக்கிகள் ஒரு பிரபலமான பாடகர் மற்றும் நடிகரை குறி வைத்துள்ளது.

பாதாள உலக தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானி இம்ரானின் அடுத்த இலக்கு பிரபல பாடகர், நடிகர் உட்பட 7 பேர் என தகவல் கிடைத்துள்ளது.

பாடகர் மற்றும் நடிகர் மற்றும் குழுவினர் பாதாள உலகத்திடம் இருந்து பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை என கூறி அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னரும் பாதாள உலகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இந்த பாடகர், நடிகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரைச் சந்திப்பதற்காக இந்தக் குழுவினர் முன்னைய சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த அதே நாட்டிற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணையில் இவ்வாறான செய்திகள் பரவி வருவதாகவும், இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் களமிறங்கி உண்மையைக் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.