ஒரே நாடு இரு தேசம் எனும் கட்சியிடம் ‘வழிமுறையோ பொறிமுறையோ இல்லை’ – தேவானந்தா

‘ஒரே நாடு, இரு தேசம் எனும் கட்சியிடம், வழிமுறையோ பொறிமுறையோ” இல்லை என, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியா பெரியார் குளத்தில்,நேற்று (21) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தலைமைகள், கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதும் கிடையாது . சந்தர்ப்பங்களை உருவாக்கி பயன்படுத்துவதும் கிடையாது என்று தெரிவித்தார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு பொன்னான வாய்ப்பு என்று கூறிய அவர், அதை தமிழ்த் தலைமைகள், சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் ஆகவே, கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.