உகந்தமலையில் இம்முறை கந்தசஷ்டி விரதாதிகளுக்கு தடை! சூரசம்ஹாரம் இடம்பெறாது.

உகந்தமலையில் இம்முறை கந்தசஷ்டி விரதாதிகளுக்கு தடை!
சூரசம்ஹாரம் இடம்பெறாது: ஆலயவண்ணக்கர் சுதா தெரிவிப்பு.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தில் இந்தவருடத்திற்கான கந்தசஷ்டி விரதகாலத்தில் ஆலயத்தில் தங்கியிருந்துவிரதம்அனுஸ்ட்டிக்கும் விரதாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சமகால கொரோனா சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு ஆலய பரிபாலனசபையின் உயர்பீடக்கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

இந்துக்களின் மிகமுக்கிய விரதங்களிலொன்றான கந்தசஷ்டி விரதம் இம்முறை 15ஆம் திகதி ஆரம்பமாகிது.

ஆறுநாட்கள் அனுஸ்டிக்கும்இவ்விரதத்தை பலநூறு பக்தர்கள் உகந்தமலைமுருகனாலயத்தில் தங்கியிருந்து அனுஸ்டிப்பது வழமை.

ஆனால் இம்முறை கொரேனாசூழலால் அதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் இறுதிநாள் இடம்பெறும் சூரசம்ஹார நிகழ்வும் நடாத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் வர அனுமதி க்கப்படமாட்டார்கள்.

அதேவேளை அந்த ஆறு நாட்களும் தினப்பூஜை ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையில் இடம்பெறும். அன்றைய உபயகாரர் மாத்திரம் ஆலயத்திற்குவந்து பூஜையில் பங்கேற்கமுடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.