ரத்தன தேரோ முஸ்லீம் புறக்கணிப்பைத் தொடங்குகிறார் : மதரஸா மற்றும் காதி நீதிமன்றங்களை தடை செய்ய கெடு!

பௌத்த தேரர்களின் உதவியுடன் முஸ்லீம் வணிக மற்றும் வியாபார செயற்பாடுகளை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை தொடங்க அனைத்து துறவிகளும் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரா கூறியுள்ளார். ரத்தன தேரர் மேலும் கூறுகையில், தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் இப்போது மக்களுக்கு உணவுகளை வழங்கும் செயல்பாடொன்றைத் தொடங்கியுள்ளன என குற்றம்சாட்டியுள்ளார்

ஜாமியத்துல் உலமா அமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், மதரசா பள்ளிகள், காதி நீதிமன்றங்கள் மற்றும் புர்காவுக்கு ஒரு வாரத்திற்குள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் ரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒரு சங்க மாநாடு கூட்டப்பட்டு, அனைத்து முஸ்லீம் பொருட்கள் மற்றும் முஸ்லீம் வணிகங்களை புறக்கணிக்க சிங்களவர்கள் தலைமை மகாநாயக்கர்களுடன் இணைந்து செயல்படப் போவதாக ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.