குவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ கப்பல் வந்துள்ளது:

குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் INS Kolkata இராணுவ கப்பல் 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கலன்கள்,200 ஆக்ஸிஜன் சிலிண்டர் வாயு 4 ஆக்ஸிஜன் செறிவூட்டல் உபகரணங்கள் உள்ளிட்டவையுடனும் இந்தியா புறப்பட்ட நிலையில், இரண்டாவது கப்பலான MV Capt Kattelmann 75 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மற்றும் 1000 ஆக்ஸிஜன் சிலிண்டர் வாயுவைக் கொண்டு புறப்பட்டது.

இந்நிலையில் (05/05/21) புதிதாக INS KOCHI மற்றும் INS TABAR ஆகியவை குவைத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இவை இரண்டும் 100 MT திரவ ஆக்சிஜன் மற்றும் 1400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர மருத்துவ பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல குவைத்துக்கு வந்துள்ளது. அதுபோல் இரண்டு தினங்களுக்கு முன்பு 40 டன் மருத்துவ பொருட்களுடன் குவைத் ராணுவ விமானம் டெல்லி சென்றடைந்து, இந்திய அரசிடம் அதை ஒப்படைத்தது குறி்ப்பிடத்தக்கது.


Leave A Reply

Your email address will not be published.