கொரோனா விடுதியமைக்க பல்வேறு உதவிகள் தேவை! – மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தால் கோரிக்கை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கொரோனா விடுதிகள் ஆரம்பிக்கப்படவில்லை. அதனை அமைப்பதற்கு பல்வேறு உதவிப்பொருள்கள் தேவை என்று மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் சுகாதார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகள் தயார்ப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. வடக்கில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆதார மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை விடுதிகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இதுவரை கொரோனா சிகிச்சை விடுதி ஆரம்பிக்கப்படவில்லை. அந்த விடுதியை ஆரம்பிப்பதற்கு அடிப்படை உபகரணங்களிலிருந்து பல தேவை என்று மாவட்ட மருத்துவமனை பட்டியல்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.