யாழ். ஊரெழு விபத்தில் படுகாயமடைந்த விமானப்படைச் சிப்பாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒருவர் பஸ் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார்.

ஏ.எம்என் குணசேகரா (வயது 33) என்னும் வெலிமடையைச் சேர்ந்த விமானப் படைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

விடுமுறையில் கண்டிக்குச் சென்ற படையினரை கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்குக் கடமைக்கு ஏற்றிவந்த பஸ்ஸில் சாரதி அருகே இருந்த கம்பியில் குறித்த விமானப்படைச் சிப்பாய் சாய்ந்து நின்றுள்ளார். இதன்போது ஊரெழுப் பகுதியில் நாய் ஒன்று திடீரெனக் குறுக்கே சென்றதால் சாரதி சடுதியாகப் பிறேக் பிடித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் விமானப்படைச் சிப்பாய் தூக்கி வீதியில் வீசப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.