அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜுன் 7 ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் முடிவு.

7 ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதேநேரம், நாளை (25) எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப் பகுதியில் சில்லறை கடைகள், பேக்கரிகள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.