வெளிச்சத்திற்கு வந்த உ.பி-யில் நடக்கும் கொடூரம்! கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசும் அவலம்: பதபதைக்க வைக்கும் காட்சி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் நதிகளில் தூக்கி வீசப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, நதிக்கரைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேர் பிபிஇ கிட் அணிந்துகொண்டு கொரோனாவால் இறந்த நபரின் உடலை ரப்தி நதியில் தூக்கிவீச முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்வாலி பகுதியில் இச்சம்பவத்தை ஒரு தம்பதியினர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, இறந்தவரின் பெயர் பிரேம்நாத் என தெரியவந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பிரேம்நாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் என பல்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார். அவரிடன் உடலை அவரது உறவினர்கள் நதியில் தூக்கிவீச முயற்சித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி வி.பி.சிங் தெரிவித்துள்ளார். பிரேம்நாத்தின் உடல் மீண்டும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.