யாழில் கொரோனாவால் இன்றும் மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 03 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய காரைநகரைச் சேர்ந்தவர் என்றும், இன்னொருவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதன்படி யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.