சஜித்தான் எதிர்க்கட்சித் தலைவர்: நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போது கொரோனா நெருக்கடி மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் எனவும், இதனால் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டுபடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்விடயம் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது சம்பிக்க, மனோ, ஹக்கீம் உள்ளிட்டவர்கள் இணைந்து சஜித்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனையை முன்வைத்தனர். சரத் பொன்சேனா, லக்‌ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்டவர்கள் அதனை வழிமொழிய, யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.