விபத்தில் சிக்கி துடிதுடித்த இளைஞர்! வேட்டியை கிழித்து சிகிச்சையளித்த எம்எல்ஏ

விழுப்புரத்தில் விபத்தில் சிக்கிய நபருக்கு, தன்னுடைய வேட்டியை கிழித்து ‘டாக்டர்’ எம்எல்ஏ லட்சுமணன், முதலுதவி அளித்த சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்கும் திமுக எம்எல்ஏ-க்கள், மனுக்களை வாங்கி மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த வகையில் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன், மக்களிடம் மனுக்களை பெறுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ராகவன்பேட்டை அருகே பைக்கில் வந்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் ஜெயகுமார் (24) என்பவர், விபத்தில் சிக்கி இடது கால் எலும்பு முறிவுடன் சாலையோரம் கிடந்தார்.

இதனை பார்த்ததும் எம்எல்ஏ லட்சுமணன் முதலுதவி சிகிச்சையளிக்க தொடங்கினார்.

கட்டுப்போட துணிகள் ஏதும் இல்லாத போது, தன்னுடைய வேட்டியை கிழித்து கட்டுப் போட்டார்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்ததும் எம்எல்ஏ புறப்பட்டு சென்றார், எம்எல்ஏ ஆவதற்கு முன்பாக லட்சுமணன் எலும்பு முறிவு மருத்துவராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.