கொரோனா முன்கள பணியாளர்களுக்கான விருது வழங்கும் விழா

கடந்த நான்கு ஆண்டுகளாக உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மருத்துவப் பிரிவு மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

உலகெங்கும் உள்ள தமிழ் மருத்துவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், மருத்துவத்துறையில் சிறந்து விளங்கவும், தமிழ்நாட்டில் உள்ள மூத்த மருத்துவர்கள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், தங்களுடைய அனுபவங்களை உலகத்தில் உள்ள தமிழ் மருத்துவர்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, இவ்வாண்டு கொரானா இரண்டாம் அலையின் போது புதியதாக அமையப்பெற்ற தமிழக அரசு, முதல்வர் மாண்புமிகு மு. க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், 104 சேவை மையங்கள், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், செய்தியாளர்கள், போன்றவர்களுக்கு மெடிக்கல் எக்சல்லேன்ஸ் அவார்ஸ் (MEDICAL EXCELLENCE AWARDS) வழங்கி கௌரவிக்கபட உள்ளனர். இவ்விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அழைத்து ஜூலை 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னையில் விருது வழங்கப்பட உள்ளது.

Mr. Selvakumar, President, World Tamil Chamber Of Commerce. Global Organization Of Tamil Origin.

இவ்விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அழைத்து ஜூலை 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னையில் விருது வழங்கப்பட உள்ளது.

அயல்நாட்டு தமிழ் மருத்துவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தங்களின் பங்களிப்பாக நோய் தொற்றிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதையும் அயல்நாட்டில் தாங்கள் எதிர்கொண்ட மருத்துவ சவால்களையும் கட்டுரையாக வழங்கவுள்ளனர் என உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவரும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.

#315K, 2nd Floor, Ten Square Mall, 64, Jawaharlal Nehru Road, Koyembedu, Chennai-600107.Tel: +9144 42611500, +91 9841042540,presidentwtcc@gmail.comworldtamilchamberofcommerce.com

– Krishzzz Media

Leave A Reply

Your email address will not be published.