கற்றல் மத்திய நிலையத்தில் மாணவர்கள் 24 பேருக்கு குளவி கொட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பாராதி மாகா வித்தியாலயத்தில், கற்றல் மத்திய நிலையத்தில் கற்றல் செயற்பாட்டிற்காக சென்ற மாணவர்களில் 24 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாரதி மாகாவித்தியாலயத்தில் கற்றல் மத்திய நிலையத்தில் இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பாதிக்கப்பட்ட 24 பாடசாலை மாணவர்கள் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 05மாணவர்களும் 19 மாணவிகள் அடங்குகின்றனர். குறித்த கிராமங்களில் தொலைத்தொடர்பு சிக்னல் இல்லாத நிலையில் மாணவர்கள் இணைய வழி கல்வியினை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கற்றல் மத்திய நிலையமாக இயங்கிய வேளையிலேயே குறித்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 மாணவர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.