இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 35 வது லீக் ஆட்டத்தில் , வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது .

இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலங்கா 41 பந்துகளில் 68 ரங்களும் , நிசாங்கா 41 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரஸ்செல் அதிகபட்சமாக 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹெட்மயர் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நிகோலஸ் பூரன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி சார்பில் அவிஷ்கா பெர்னாண்டோ, சமிகா கருணாரத்ன, வனிந்து ஹசரங்கா ஆகியோர் 2 விக்கெட்கள் எடுத்தனர். துஷ்மந்த சமீரா, தசுன் ஷனகா தலா ஒரு விக்கெட்கள் எடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.