வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 34 வது லீக் ஆட்டத்தில் , ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் மோதியது .

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைதேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினர்.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் வங்காளதேச அணி 15 ஒவர்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ,மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .

இதனையடுத்து 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .

Leave A Reply

Your email address will not be published.