ஆஷஸ் 85 ஆண்டுகால சாதனையைப் படைத்த ஸ்டார்க்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டனாக முதல் போட்டியிலேயே கமின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.மேலும் , இந்த ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸை ஆஸி., பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் போல்ட் செய்து விக்கெட் எடுத்தார்.

இதன்மூலம் 1936ஆம் ஆண்டிற்குப் பின் கிட்டத்தட்ட 85 ஆண்டுகள் கழித்து ஆஷஸ் டெஸ்ட்டில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்கிற சாதனையை மிட்செல் ஸ்டார்க் புரிந்திருக்கிறார்..

Leave A Reply

Your email address will not be published.