ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஒர் நற்செய்தி… 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள்!

ஐடி துறையில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு ஒர் நற்செய்தி வந்துள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள், இந்த ஆண்டில் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க முடிவு செய்துள்ளன. சமீபத்தில் காலாண்டு நிகர லாபத்தை அறிவித்ததை தொடர்ந்து, வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக வெளிவந்துள்ள தகவல்களின் படி, இந்த மூன்று பெரும் ஐடி நிறுவனங்களும், 2021ம் ஆண்டில் 1.7 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டை போலவை இந்த ஆண்டும், இதே எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை தொடர இந்நிறுனங்கள் முடிவு செய்துள்ளன.

முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டில் இந்நிறுங்கள் வெறும் 31,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தாற்று காரணமாக நாடு முழுவதும் டிஜிட்டல் பயன்பாட்டிற்கு அதிகளவில் மாறிவருவதால், அதிகளவில் ஐடி வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys),இந்த வருடம் தங்களின் உலகளாவிய பட்டதாரிகள் பணியமர்த்தல் திட்டத்தின் கீழ் 55,000க்கும் மேற்பட்டவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் கூறினார்.

தொடர்ந்து, இதுகுறித்து இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் கூறுகையில், எங்கள் திறமை உத்தியானது, பணியாளர்களின் திறன் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்தி, வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய மையமாகத் தொடர்கிறது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனமும் கடந்த ஆண்டை போலவே தொடர்ந்து அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளது. எனினும், எத்தனை பேரை நியமிக்க உள்ளது என்பது பற்றிய எந்த குறிப்பிட்ட விவரங்களையும் கொடுக்கவில்லை.

விப்ரோ நிறுவனம் இந்த ஆண்டு சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. விப்ரோவின் தலைவர் சௌரப் கோவில் கூறும்போது, இதுவரை புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 17,500 ஆக இருக்கும் என்றும், மேலும், இந்த ஆண்டுக்குள் 30,000 பேரை பணியமர்த்துவோம் என்றும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.