5வது முறையாக விஜய்யுடன் இணைந்த பிரபலம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கம் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இடத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் நியூ லுக் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தளபதி 66 படத்தில் நடிக்கும் இன்னும் பிற நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு பகிர்ந்து வருகிறது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் நடிப்பதாக படக்குழு அறிவித்த நிலையில் தற்போது யோகி பாபு, நடிகை சங்கீதா, பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் யோகி பாபு விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ள யோகி பாபு தற்போது விஜயுடன் 5 வது முறையாக இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.