ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது.

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது. ரஷிய நாடாளுமன்றத்தில் இன்று இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இராணுவத்தில் சேரும் தொழில்முறை வீரர்களுக்கான வயது வரம்புகளை நீக்கும் மசோதாவை ரஷிய நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றியுள்ளனர்.

இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பு 40 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததை ரத்து செய்வதற்கான மசோதா இதுவாகும். ரஷிய ராணுவத்தில் ஆட்சேர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது. பழைய ஆட்சேர்ப்பு நடைமுறையின்படி ராணுவத்தில் சேர்க்கப்பட்டால், துல்லியமான ஆயுதங்களை இயக்குவதற்கு அல்லது பொறியியல் அல்லது மருத்துவப் பணிகளில் பணியாற்றுவதற்கு ஏற்றதாக இருக்கும்.ஆனால், இந்த நடவடிக்கையானது தேவைக்கு ஏற்ற, சிறப்பு தகுதி மற்றும் திறன் உள்ளவர்களை பணியமர்த்துவதை எளிதாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில், விருப்பமுள்ள தன்னார்வ ஒப்பந்த வீரர்கள் மட்டுமே சண்டையிட அனுப்பப்படுகிறார்கள் என்று ரஷிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய மசோதா படி, இன்னும் இளம் வீரர்கள் நிறைய பேரை ராணுவத்தில் இணைத்து கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ரஷிய இராணுவம் தன்னார்வலர்களை அதிகளவில் நம்பியுள்ளது.

அங்கு 18-27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு வருட கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், பலர் பல காரணங்கள் தெரிவிப்பதால், அவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்களிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.