ரணில் கேட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய சஜித் 15.6 மில்லியன் பெறுமதியான அரியவகை மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் கையளித்தார்!

மே 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய சஜித் 15.6 மில்லியன் பெறுமதியான அரியவகை மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் கையளித்தார்!

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாட்டுக்கு , டொலர் தட்டுப்பாடு என பலர் கூறினாலும், தரவு சேமிப்பில் உள்ள பிரச்சினையே உண்மையான காரணம் எனவும் தற்போதுள்ள முறைமை வினைத்திறனுடன் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘மக்கள் சுவாசம்’ மற்றும் ‘சமகி ஜன பலவேகய’ ஆகியவற்றின் கீழ் இதய நோய்க்கான அத்தியாவசிய மருந்தான Recombinant Streptokinase (IP.15000001U) கையிருப்பை பெற்றுக்கொள்வதற்காக இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே திரு. பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

15.6 மில்லியன் ரூபா பெறுமதியான 4,000 Recombinant Streptokinase தடுப்பூசிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நிறைவேற்று ஒருங்கிணைப்பாளர் நயனவாசலதிலக அவர்களிடம் கையளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.