நான் செத்தால் உன் கதி என்னவாகும் என கேட்டபடி மேடையில் உயிர் விட்ட நடிகர் (வீடியோ)

கலேவெல பிரதேசத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஜஹுதா எனும் உரையாடல், அபிநயம் கலந்த பாடல் கூத்து ஒன்றின் காட்சியொன்றில் தந்தையாக நடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் நாடகத்தில் எனது உயிர் போனால் மகளே உன் நிலை என்ன எனக் கேட்பதாகவும் , ஒரு கால் குழியிலும் ஒரு கால் நிலத்திலும் இருக்கிறது. (காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது என தமிழில் பேசும் வசனத்தை ஒத்த வசனம்) நான் இல்லாது போனால் உன் கதி என்ன என சொல்கிறார்.

அந்த வசனம் போல அவர் நிலை தடுமாறி விழுகிறார். மகளாக நடிக்கும் நடிகை அவர் நடிப்பதாக நினைத்து அப்பா எழுந்திருங்கள் என்கிறார். அவர் மேடையில் உயிர் துறக்கிறார்.

இந்த நிகழ்வு மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.