ஒரு மாதத்துக்கு மேல் காணாமல் போன கடற்படையினரது நிலை.

காணாமல் போன 6 மாலுமிகள் பானம தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இன்று அழைத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அங்குள்ள அனைத்து கடற்படையினரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

செப்டெம்பர் 16ஆம் திகதி, சந்தேகத்திற்கிடமான கப்பல்களைக் கண்டறியும் பணியில் இந்தக் குழுவினர் ஈடுபட்டிருந்தபோது, கப்பலின் இயந்திரத்தில் ஏதோ சிக்கியதன் காரணமாக, கப்பலின் இயந்திரம் செயலிழந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பல நாட்களாக பெரும் முயற்சியுடன் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தும், அது தோல்வியடைந்ததால், இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் 430 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லைக்கு கப்பல் சென்றுள்ளது என்றார்.

சர்வதேச கடற்பரப்பில் ஒரு வர்த்தகக் கப்பல் இந்தக் கப்பலைக் கடந்து சென்றதாகவும், அவர்களிடம் உதவி கோரி பணியாளர்கள் கூச்சலிட்ட போதிலும், அவர்கள் இதனை அவதானிக்கவில்லை என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கப்பல் சர்வதேச கடற்பரப்புக்கு சென்ற போதும் அதன் இயந்திரத்தை இயக்குவதற்கு பெரும் முயற்சி எடுத்து இம்மாதம் 9ஆம் திகதி கப்பலின் இயந்திரத்தை இயக்க முடிந்துள்ளது என்றார்.

இயந்திரத்தை இயக்கி கரையை நோக்கி வரும் வழியில் , அது மீண்டும் வேலை செய்வதை நிறுத்தியது, அதை மீண்டும் இயக்கிய பின்னர், கடற்படையினரால், நாட்டின் கடல் பகுதிக்கு வந்து கடற்படையின் A 521 கப்பலுக்கு தகவல் கொடுத்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.