புருண்டி நாட்டின் அதிபர் மாரடைப்பால் மரணம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டி நாட்டின் அதிபர் பியர் குருன்சிஸா நேற்று உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

55 வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருண்டி அரசு தனது டுவிட்டர் பக்கத்தில், அரசாங்கம் புருண்டி மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் மிகுந்த துக்கத்துடன் அதிபர் பியர் குருன்சிஸா மரணம் அடைந்த செய்தியை அறிவிக்கிறது என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.