பொலிஸ் நிலையங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

நாடளாவியரீதியில் அண்மைய சில நாட்களாக விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்காக இரவு 8 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கான விசட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் இந்த விசேட நடவடிக்கையில் ஜீப், டபுள் கப் வாகனங்கள், மற்றும் மோட்டார் கார் ஆகியவை குறித்து கவனம் செலுத்துமாறும் அண்மைய நாட்களில் மேற்படி வாகனங்களே விபத்தில் பெருமளவில் சிக்கியுள்ளதால் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.