கோடீஸ்வரர்கள் மட்டுமே பாராளுமன்றம் செல்ல முடியும் – அஜித் பி பெரேரா

பிரச்சார நடவடிக்கைகள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவினால் புதிதாக விதித்துள்ள சட்டடங்களில் பெரும் அநீதி இருப்பதாகவும் அதற்கமைய பாராளுமன்றம் செல்லக்கூடியது செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த கோடீஸ்வரர்கள் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (25) சமகி ஜன பலவேகய பிரதான காரியாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சஜித் பிரேமதாசவின் புகைப்படத்தை அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அஜித் பி பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தல் பிரச்சாரப் பணிகள் தொடர்பாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களில் பெரும் அநீதி நிலவுகிறது.

தேர்தல் சட்டத்தின் தொலைக்காட்சி விளம்பரங்கள் பற்றி எங்கே உள்ளது ? ரேடியோ விளம்பரம் குறித்த தேர்தல் சட்டம் எங்கே? வெப் தளங்கள் குறைத்த தேர்தல் சட்டம் எங்கே? கிராமத்தில் உள்ள அலுவலகங்களில் கட்டவுட்கள் அனுமதிக்கப்படவில்லை, அதை அகற்றுகிறார்கள். ஆனால் டிவி மற்றும் ரேடியோவில் விளம்பரம் செய்ய முடியும். அது பணக்காரர்களால் மட்டுமே முடியும்.

இதன் பொருள் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த கோடீஸ்வரர்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு செல்ல முடியும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.