இலங்கையின் பல பகுதிகளில் கொரோனா இரண்டாவது அலை ….

இரத்தினபுரி

இரத்னபுரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் பணியாற்றி வருகின்ற இராணுவத்தினராவார்கள்.

அவர்களுடன் தொடர்பு கொண்ட சுமார் 60 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள மூன்று பேரும் இரத்தினபுரி தேவாலய அருகேயும் , குருவிட்ட நடுக்காரதெணிய, , எஹெலியகோட தொறணகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

பலியான மூன்று பேரில் ஒருவர் இரத்தினபுரியில் உள்ள சீவலி மற்றும் அலோசியஸ் வித்யாலயாங்களுக்கு சென்று வந்திருந்தார், எனவே அன்று பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் பலர் வீட்டிலே தனிமைப்படுத்தலுக்கு உட்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தங்கல்ல
தங்கல்லவில் உள்ள பட்டியபொல பகுதியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வுக்காக வந்தவராகும்.

அவரது நெருங்கிய உறவினர்கள் 12 பேர் மற்றும் இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் இருவர் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி

கண்டி குண்டசாலைப் பகுதியல் ஒருவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளளார். இவரும் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் பணிபுரியும் ஒரு ஆலோசகராவார். இதன் காரணமாக அவரோடு நெருக்கமாக பழகிய 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளர்.

வவுனியா

கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் பணிபுரியும் வவுனியா வாசியான இராணுவத்தில் உள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று தாக்கியுள்ளது. இப்போது அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

Comments are closed.