22 மில்லியன் பேர் இருக்கும் நாட்டில் 28,000 பரிசோதனைகள் செய்ததாக கூற வெட்கம் இல்லையா ? – GMOA

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய சமூகத்தில் இதுவரை நடத்தப்பட்ட PCR சோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது.

” சுகாதார அமைச்சு இன்று வரை எங்களுக்கு திருப்தி அளிக்க கூடியளவு PCR பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை. PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு நாங்கள் கூறியதன் பின்னர் சுகாதார அமைச்சரிடம் மாதத்திற்கு குறைந்த பட்சம் 68000 பரிசோதனைகளை செய்யவேண்டும் என தொற்றுநோயியல் பிரிவும் ஒரு அறிக்கையை அளித்தது.

தற்போது எவ்வளவு செய்யப்பட்டுள்ளது? குறைந்த பட்சம் அதில் அரை பகுதியாவது செய்யப்பட்டுள்ளதா? கடந்த மாதத்தில்? இது திறமையின்மையா? அல்லது அறியாமையா? என்ன நடக்கிறது?

25.06.2020 திகதி படி சுமார் 28496 பி.சி.ஆர் சோதனைகள் பொது மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, 22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் 28,000 பேரை பரிசோதித்ததாகக் கூற சுகாதார அமைச்சு வெட்கப்படவில்லையா? இது குறைந்தது 0.0001 மக்கள்தொகையை உள்ளடக்கியதா? ”என்று அந்த சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Comments are closed.