பாரம்பரிய தொழில்களில் தன்னிறைவும் கல்வியில் மேம்பாடுமே எமது இலக்கு – கணேஸ்வரன்

கடற்தொழில் விவசாயம் உள்ளிட்ட எங்களுடைய பாரம்பரிய தொழில்துறைகளை மேம்படுத்தி அவற்றில் தன்னிறைவு காண்பதுடன் கல்வியில் மேம்பாடு காண்பது மட்டுமே தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்கான வழிகளாகும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் தேர்தல் மாவட்ட தலமை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் கூறியுள்ளார்.

சமகால தேர்தல் நிலமைகள் மற்றும் தம்முடைய நிலைப்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன் போது மேலும் அவர் கூறுகையில் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் கடற்தொழில் உள்ளிட்ட பாரம்பரிய தொழிற்துறைகளில் மேம்பாடு காணப்படவில்லை. அது காணப்படவேண்டும். குறிப்பாக நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.

அவற்றின் ஊடாக பொருளாதார ரீதியாக நாங்கள் தன்னிறைவு காணவேண்டும். குறிப்பாக இஸ்ரேல் நாடு ஒரு விவசாய நாடு அல்ல. ஆனால் அவர்கள் பாலைவனத்தில் விவசாயம் செய்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்களால் முடியுமென்றால் எங்களுடைய நாடு ஒரு விவசாய நாடு. எங்களால் ஏன் முடியாது?

மேலும் உலகில் 2 ஆவது பணக்கார அமைப்பான விடுதலைப்புலிகளை அழித்தது தமிழ் மக்களின் இத்தனை அழிவுகளுக்கும் காரணமானது சர்வதேசம். அதே சர்வதேசத்திடம் சென்று அழிவுகளுக்கு நீதி கோருவதில் என்ன நியாயம் இருக்கின்றது.எனவே இந்த பொய்களை ஒருபுறம் வைத்துவிட்டு எதிர்காலத்தில் எங்கள் இருப்பை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதில் நாங்கள் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு எங்களுடைய பொருளாதார ரீதியான தன்னிறைவும் அறிவுசார் மேம்பாடுமே தேவை என்றார்.

Comments are closed.