தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தேர்தல்

தேவையேற்படும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு சுகாதார தரப்பினர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அதிகளவான இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் அழைத்து வரப்பட உள்ளதால், அவர்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.