குமார் குணரட்ணம் உட்பட 42 முன்னிலை சோசலிச கட்சியை சேர்ந்தோர் கைது

கொள்ளுபிட்டி மற்றும் டவுன் ஹோல் ஆகிய பகுதிகளில் வைத்து 42 முன்னணி சோசலிஸ கட்சியினரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் முன்னணி கட்சியின் செயலாளர் குமார் குணரத்னம், பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ ஆகியோர் அடங்குவர்.

ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின அமெரிக்கரின் மரணத்துடன் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் பரவி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே முன்னணி சோசலிஸ கட்சியினர் இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

அந்த போராட்டத்துக்கு மாஜிஸ்திரேட் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவை மீறும் நபர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 185 ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

Comments are closed.