கிரிபத்கொட நகர மத்தியில் ஒருவர் பலரால் தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பெண்ணொருவருடன் இருந்த தகாத உறவு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பிரதான வீதியில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே இந்த குழுவினர் அந்த நபரை துரத்திச் சென்று தாக்குவது சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் பதிவாகியுள்ளது.