இந்தியக் காங்கிரஸ் எம்.பி. யாழ்ப்பாணத்துக்கு வருகை.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாடு – திருவள்ளுர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சசிகாந்த் செந்தில் யாழ்ப்பாணத்தில்
பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகித்த சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் ஏற்பாட்டில் பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதையடுத்து வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பலரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.