யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்!

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ். மாவட்டத்துக்கான அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
யாழ். மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபப் பெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
இதன்போது யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பொ.தயானந்தன், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான க.சிறீமோகனன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.