அதிகாலை கைதான மிலான் பிற்பகல் பிணையில் வந்தார்!

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிற்பகல் பிணை வழங்கியுள்ளது.
காணி ஒன்றின் வரைப்படத்துக்கு அனுமதி வழங்கும் போது இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டு மிலன் ஜயதிலக்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் இந்த முறைகேடு நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.