சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான இவா், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழரசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள் கூறுகையில், உயிரிழந்த தமிழரசனுக்கு சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணை பாதிப்புகள் இருந்தன; தற்போது கரோனா பாதிப்பு இருந்தபோதும், இணை நோய்களாலேயே அவா் உயிரிழந்தாா் என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.