தமிழருக்கு தீர்வு உறுதி – பிரதமர் ஹரிணி திட்டவட்டம்.

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும். புதிய அரசமைப்பின் ஊடாக அந்தத் தீர்வை வழங்குவோம்.” – என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விடயம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்குத் தமிழ் மக்களும் ஆணை வழங்கியுள்ளார்கள். எமது ஜனாதிபதி மீதும், எமது அரசு மீதும் தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம்.

வடக்கு, கிழக்குக்கு நாம் விஜயம் செய்யும் ஒவ்வொரு தடவையும் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளுடன் எம்முடன் பேசுவார்கள். எனவே, அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றியே தீருவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.