ஜெகன்மோகன் ரெட்டி கார் சக்கரத்தில் சிக்கி தொண்டர் பலி: ஓட்டுநர் கைது, 6 பேர் மீது வழக்குப்பதிவு
ஜெகன்மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் சிக்கிய தொண்டர் உயிரிழந்தார்.
ஆந்திரா, வெண்ட்ட பள்ளி கிராமத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்
பெருமளவில் குவிந்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது, ஜெகன்மோகன் ரெட்டிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர் சிங்கையா(54) மாலை அணிவித்து வரவேற்பு அளிக்க முயன்றார்.
ஆனால், கால் தவறி கீழே விழுந்த சிங்கையா மீது ஜெகன்மோகன் சென்ற காரின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கியது. உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில், அவர் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஜெகன் மோகன் ரெட்டி, உதவியாளர் நாகேஸ்வர ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி,
முன்னாள் எம்எல்ஏ பேர்னி நானி ஆகிய 6 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் ஓட்டுநரான ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
