நீண்ட நேரமாக நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வு – நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பிலும் விவாதம்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் நேற்றைய சபை அமர்வுகள் நீண்ட நேரமாக இடம்பெற்றதோடு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பிலும் சபை உறுப்பினர்களால் நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சபை அமர்வு நேற்று மாநகர சபை சபா மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

சுகாதாரக் குழு, நிதிக் குழு உள்ளிட்ட மூன்று குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையின் அனுமதிக்காகச் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது உறுப்பினர்கள் நீண்ட விவாதங்களில் ஈடுபட்டமையால் சபை அமர்வுகள் நீண்ட நேரம் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

குறிப்பாக மாநகர சபை அமர்வுகளுக்குத் தேவையான பணியாளர்களை நியமிப்பது தொடர்பிலும், வட்டாரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும், நல்லூர் உற்சவ காலத்தில் அமைக்கப்படும் வீதித் தடைகள் தொடர்பிலும் நீண்ட நேர விவாதங்கள் நடைபெற்றன.

மேலும் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பிலும் நீண்ட விவாதங்கள் இடம்பெற்றமையால் சபை அமர்வுகள் இரவு 7 மணி வரை இடம்பெற்றன.

வெறுமனே 25 உறுப்பினர்கள் மாத்திரமே சபை அமர்வுகளில் இறுதி வரை கலந்துகொண்டமையால் பெரும்பாலான இருக்கைகள் வெறுமையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.