யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்.

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சங்கரத்தை – துணவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேற்படி இளைஞர் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சேவிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். பணிபுரியும்போது அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இவ்வாறு மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.