உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் திடீரென உயிரிழப்பு!
ஜி.சீ.ஈ. உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் படித்துக்கொண்டிருந்த மாணவி, காலை தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததை அவதானித்த பெற்றோர், மயக்க நிலையில் இருந்த மாணவியை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மாணவியைப் பரிசோதித்த வைத்தியர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவியின் மரணம் தொடர்பாக கண்டறிவதற்கு, மாணவியின் வீட்டுக்குப் பொலிஸார் சென்றனர்.
எனினும், மாணவியின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
