சகல பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பம்!
2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.
அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை நாளை முதல் செயற்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்குக் கடந்த டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை முடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
