யாழ். நாக விகாரையின் விகாராதிபதியையும் இன்று சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி.
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்துக்கும் சென்றார்.
அங்கு நாக விகாரையின் விகாராதிபதி, வட இலங்கையின் தலைமை சங்கநாயக்க, வண. மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி, விகாராதிபதியுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.
அதன்பின்னர் விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் அவர்களின் விவரங்களையும் கேட்டறிந்து சுமுகமாக ஜனாதிபதி உரையாடினார்.
