சாதித்த ஒடிசா பெண்: மின்சார விபத்தில் நான்கு உறுப்புகளையும் இழந்தும் வில்வித்தையில் உலக சாம்பியன் – பாயல் நாக்கின் அசாத்தியப் பயணம்

புதுடெல்லி,

ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;-

ஒடிசாவை சேர்ந்த தினக்கூலி கொத்தனாரின் மகள் பாயல் நாக்.எட்டு வயதில் மின்சாரம் தாக்கியாதில் தனது கை கால்களையும் இழந்தார். கை கால்களை இழந்த பிறகும் முடங்கிவிடாமல், தனது வாயால் ஓவியங்கள் வரைய பழகினார்.

கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் வில் எய்து உலகை வியக்க வைத்த ஷீத்தல் தேவியை உருவாக்கிய அதே பயிற்சியாளர், இப்போது நான்கு உறுப்புகளும் இல்லாத பாயல் நாக்கையும் உலக சாம்பியனாக மாற்றியுள்ளார்.

ஏப்ரல், 2026-ல் பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதி போட்டியில் தனது முன்மாதிரி நாயகியான ஷீத்தல் தேவியை தோற்கடித்தார்.

நான் எப்போதெல்லாம் மனச்சோர்வாகவோ அல்லது என்னை நினைத்து நானே வருத்தப்படுகிறேனோ, அப்போதெல்லாம் பாயல் மற்றும் ஷீத்தலின் படங்களை மீண்டும் பார்த்து, தைரியம் மற்றும் நேர்மறைச சிந்தனை ஆகிய வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை எனக்கு நானே நினைவூட்டி கொள்வேன்.

இந்த சாம்பியன்கள் எனது இன்றைய ஊக்கம் மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் எனக்கு ஊக்கத்தின் ஆதாரமாக இருப்பார்கள் என ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.