ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு: பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஹொஷியார்பூர் மாவட்டம் சக் சமனா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் சிறுவன் உள்ளார்.

இந்நிலையில், சிறுவன் நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் 30 ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர், போலீசார் விரைந்து சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

9 மணிநேர போராட்டத்திற்குப்பின் சிறுவனை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.