சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிதி விவகார வழக்கு: நாமலுக்கு எதிரான பிரதான விசாரணை ஜூலை 7 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பம்.

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிதி கொடுக்கல் – வாங்கல் விவகாரம் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட ‘வழக்கு விசாரணைக்கு முந்தைய மாநாடு’ இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்தே, வழக்கின் அடுத்தகட்ட நகர்வாகப் பிரதான சாட்சி விசாரணைகளை ஜூலை மாதம் 7ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் கிரிஷ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருந்த பல கோடி ரூபா பெறுமதியான திட்டத்தின் போது, நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் அடுத்தகட்ட விசாரணைகள் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.